உலகம் முழுவதும் வெளியாகும் முதல் தமிழ் தொடர் “சுழல் தி வோர்டெக்ஸ்”
இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ஹிருத்திக் ரோஷன், அபிஷேக் பச்சன், விஜய்சேதுபதி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் இந்திய திரை உலகில் முன்னணி படைப்பாளியாக வலம் வரும் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் ஜூன் 17ஆம் தேதியன்று அமேசான் பிரைமில் வெளியாகும் முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடரின் முன்னோட்டத்தை கண்டு ரசித்து, வியந்து தங்களின் வாழ்த்துகளை ட்விட்டர் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் அமேசான் ஒரிஜினல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ மூலம் இந்தியா முழுவதும் உள்ள திரையுலகில் சகோதரத்துவத்தை வளர்த்தெடுத்து கவனத்தை ஈர்த்திருக்கிறது.
‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரின் முன்னோட்டம் வெளியாகி, பார்வையாளர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரை கவர்ந்து, பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஸ்ட்ரிமிங் செய்யப்படவிருக்கிறது. கடந்த வாரம் அபுதாபியில் நடைபெற்ற விழாவில் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டதிலிருந்து இந்திய திரையுலகில் மட்டுமல்லாமல் திரும்பும் திசையெங்கும் இது பேசுபொருளாக மாற்றம் பெற்றிருக்கிறது.
அபுதாபியில் பாலிவுட் நட்சத்திர நடிகர் அபிஷேக்பச்சன் இதனை உலகுக்கு அறிமுகப்படுத்திய பிறகு, ‘சுழல் தி வோர்டெக்ஸி’ன் முன்னோட்டத்தை இந்திய சினிமாவின் முன்னணி பிரபலங்களான ஹிருத்திக் ரோஷன், விஜய்சேதுபதி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், ஜனனி, இயக்குநர் மோகன் ராஜா, பி. சமுத்திரக்கனி, பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ் என பலரும் இதனை பாராட்டியிருக்கிறார்கள்.
நடிகர் ஹிருத்திக் ரோஷன் இதுதொடர்பாக தன்னுடைய டுவிட்டரில்..” என்னுடைய நண்பர்களான புஷ்கர் காயத்ரியின் படைப்பு சிந்தனையில் உருவாகியிருக்கும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ பிரமிக்கத்தக்க வகையில் உருவாகியிருக்கிறது. அமேசானின் முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ சுழல் தி வோர்டெக்ஸ்’ ஜூன் 17ஆம் தேதியன்று வெளியாகிறது.” என பதிவிட்டிருக்கிறார்.
‘விக்ரம் வேதா’ படம் புகழ் இயக்குநர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரின் படைப்புச் சிந்தனையும், இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண். எம் ஆகியோரின் இயக்கத்திலும் புலனாய்வு விசாரணை பாணியிலான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரில் நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ஷெட்டி மற்றும் ஆர் பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிஸ், போலிஷ், போர்த்துகீசியம், ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மொழிகளில், உலக அளவில் ஜூன் 17 முதல் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.