“சுழல் தி வோர்டெக்ஸ்” முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஜூன் 17-ல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது
அமேசான் பிரைம் வீடியோ அண்மையில் புதிய அசல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸி’ன் முன்னோட்டத்தை வெளியிட்டது. இந்த முன்னோட்டம் வெளியானவுடன் திரையுலகினர் மத்தியில் பெரிய அதிர்வை ஏற்படுத்துவதற்கு காலதாமதமாகவில்லை. இந்த முன்னோட்டம் ஐந்து கோடி பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டதுடன், இந்தியா முழுவதிலும் உள்ள திரைப்படத் துறையினர் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து அமோகமான விமர்சனங்களையும் பெற்றது. இந்த எண்ணிக்கையானது தொடரை முழுமையாக காண வேண்டுமென்ற காத்திருப்புக்கு உச்சகட்ட உற்சாகத்துடன் கூடிய எண்ணிக்கைக்கு சான்றாகும். எனவே இந்த புலனாய்வு பாணியிலான நாடகம் ஜூன் 17ஆம் தேதி திரையிடப்படும் வரை காத்திருக்கிறோம். மேலும் இதற்கான காரணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
‘சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரை தமிழில் மட்டுமல்லாமல் முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இந்த தொடர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் மட்டுமல்லாமல், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானியம், போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கியம் உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் தொடர் கூடுதல் வெளிநாட்டு மொழிகளிலும் வசன வரிகளுடன் ஒளிபரப்பாகிறது.
தமிழ் திரை உலகின் முன்னணி படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரால் இந்த தொடர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இருவரும் தங்களது சக்திவாய்ந்த மற்றும் யதார்த்தமான பாணியில் கதை சொல்வதன் மூலம் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் என அறியப்படுகிறது.
இந்த தொடரில் ஸ்ரேயா ரெட்டி, கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆர். பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திறமையான நட்சத்திர நடிகர்கள் மற்றும் அழுத்தமான கதையுடன் கூடிய எந்த திரைக்கதைக்கும் சரியான உணர்வை தரும் வலுவான பின்னணி இசை தேவை. சுழல் தி ரோர், டைட்டில் ட்ராக் போன்றவற்றை இசை அமைப்பாளர் சாம் சி. எஸ் முன்னோட்டத்திலேயே பார்வையாளர்களின் முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் அனுபவத்தை அளித்திருக்கிறார். மேலும் திரைக்கதைக்கு தேவையான இசைக்குறிப்புகளை அளித்து ஹிட் செய்திருக்கிறார்.
சில கதைகள் ஒரு அடையாளத்தை உருவாக்குகின்றன. சுழல் தி வோர்டெக்ஸின் முன்னோட்டம், இந்த தொடரை பற்றிய பெரிய தாக்கத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தியது. முன்னோட்டத்தில் இடம்பெற்ற பல அம்சங்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. இதன் மூலம் இந்த தொடரில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? கதை என்ன? என்பதைப் பற்றிய ஆர்வத்தை பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
ஜூன் 17 தேதியன்று வெளியாகவிருக்கும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 30 க்கும் மேற்பட்ட மொழிகளில் திரையிடப்படுகிறது.