பெப்சியின் Ex தலைவர் கொரோனாவால் உயிரிழந்தார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மோகன் காந்திராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

மோகன் காந்திராமன் எம்ஜிஆர் படங்களில் இயக்குனர் நீலகண்டன் உதவியாளராக பணியாற்றியவர்.கலைவாணர் என். எஸ். கே வால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பின்னாளில் சினிமாவுக்கு வந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த அரசியல் வாதியான ஜீவாவின் அண்ணன் மகன் தான் மோகன் காந்திராமன். கம்யூனிஸ்ட் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மோகன் காந்திராமன் சிறந்த தொழிற்சங்க வாதியாக இறுதிவரை நேர்மையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் .

திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு சொந்தமாக அலுவலகம் இல்லாத நிலையில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தற்போதைய சம்மேளனத்தின் அலுவலகம் இருக்கும் இடத்தை பெற்றுத்தந்தவர் மோகன் காந்திராமன். சம்மேளனத்தின் தலைவராக தமிழகத்தின் மூன்று முதல்வர்களிடம் பல்வேறு காலகட்டங்களில் தொழிலாளர்கள் பிரச்சனை சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு தீர்வும் கண்டவர். சம்மேளனத்தில் தற்போது இணைந்திருக்கும் சில சங்கங்கள் உருவாக காரணமாக இருந்தவர். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் மோகன் காந்திராமன்.

இயக்குனர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட மோகன் காந்திராமன் மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மோகன் காந்திராமனின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button