நடிகை சமந்தாவுடன் “யசோதா” படத்தில் இணைந்த வரலட்சுமி சரத்குமார்

நடிகை சமந்தாவின் அடுத்த படமான ‘யசோதா’-வில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான இயக்குநர்களான ஹரி & ஹரீஷ் இந்தப் படத்தை இயக்க, மூத்த தயாரிப்பாளரான சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்த வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி ஐந்து மொழிகளிலும் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

முதலில் இதுபோன்ற கதையும் கதாபாத்திரங்களும் எப்படி எழுதினார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதைப் பற்றி நான் இயக்குநர்களிடமும் கேட்டேன். ட்ரைய்லரில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் அமைதியாக இருக்கும். கதையின் போக்கில் தான் என்னுடைய எதிர்மறைத் தன்மை வெளிப்படும். எனக்கும் சமந்தாவுக்கும் இடையில் இருக்கும் உறவு பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டுவதாக அமையும்.

இந்தப் படத்தில் எனக்கு பெரிய சவால்கள் எதுவும் இல்லை. சமந்தாவை போல பெரிய ஆக்‌ஷன் காட்சிகள் எனக்கு இல்லை. நடிகையாக மிகவும் அமைதியான கதாபாத்திரம் எனக்கு. நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்போது எனக்கு நானே சவாலாக எடுத்து கொள்வேன். என்னுடைய கதாபாத்திரம் சமந்தாவுக்கு இணையாக கதையில் பயணித்துக் கொண்டே இருக்கும். யசோதாவிற்கு யாருடைய உதவியாவது அவளுடைய வாழ்க்கையில் வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போதுதான் என்னுடைய கதாபாத்திரம் உள்ளே வரும். இந்தக் கதை ஒரு அறிவியல் புனைவு.

இந்தப் படத்தில் வாடகைத் தாய் மையத்தின் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் வசதியான பணத்தை விரும்பக்கூடிய ஒருவள். என்னுடைய உண்மையான குணாதிசியம் வாழ்க்கை முறை, நான் உடுத்தும் உடை என பலவற்றில் இருந்தும் இந்தக் கதாபாத்திரம் முற்றிலும் வேறானது.

படத்தின் இரண்டு இயக்குநர்களும் மிகவும் அமைதியானவர்கள். இதுபோன்ற அமைதியான இயக்குநர்களை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் அவர்கள் வலுவான ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதும் தெரியும். ‘யசோதா’ படத்தில் இருக்கும் பல கதாபாத்திரங்களை பெண்கள் தங்களோடு ஒப்பிட்டுக் கொள்வார்கள். வாடகைத்தாய் முறை என்பது அத்தனை சிக்கலானது கிடையாது. சில நடிகர்கள் அதை முயற்சி செய்ததால் அது மிகப் பெரிய விஷயமாக மாறி விட்டது. வாடகைத்தாய் என்பது படத்தில் ஒரு வரிதான். அதன் நன்மை தீமை பற்றி நாங்கள் விவாதிக்கவில்லை. இது கற்பனைக் கதை என்று நினைப்பவர்களுக்கு இது போன்ற சில மனிதர்களும் உண்மையில் இருக்கிறார்கள் என்பதை காண்பித்து இருக்கிறோம்.

சமந்தாவை சென்னையில் சந்தித்ததில் இருந்து கடந்த பத்து- பன்னிரெண்டு வருடங்களாகவே எனக்குத் தெரியும். செட்டில் ஜாலியாக இருந்தோம். அவர் ஒரு வலுவான பெண்மணி. இந்தக் கதாபாத்திரத்தில அவர் வாழ்ந்திருக்கிறார். ‘க்ராக்’ படத்தில் ஜெயாம்மா கதாபாத்திரத்திற்குப் பிறகு எனக்கு நடிப்பதற்குப் பல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தது. எனக்காக சிறப்பான கதாபாத்திரங்களை எழுதுகிறார்கள் என்பது மகிழ்ச்சியான ஒன்று. தெலுங்கு படங்களுடன் இப்போது நான் நன்றாக ஒன்றி விட்டேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது இல்லை என்பதும் ஆறுதல்.

நான் தற்போது ‘சபரி’ படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நந்தமூரி பாலகிருஷ்ணா சாரின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் முக்கிய கதாபாத்தில் நடிக்கிறேன் மற்றும் சில படங்கள் கைவசம் இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button