புதிய நிர்வாகத்தின் கீழ் சென்னை பத்திரிகையாளர் மன்றம்

ஐம்பது ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க சென்னை பத்திரிகையாளர் மன்றம் தற்போது புதிய நிர்வாகத்தின் கீழ் பத்திரிகையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட இருப்பதாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் செயலாளர் விமலேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பழைய நிர்வாகம் கடந்த 2002 – 2003 ஆண்டுக்குப் பிறகுவரவு,செலவு கணக்குகள் உள்ளிட்ட ஆண்டறிக்கைகளை முறையாக பதிவுத்துறை அலுவலகத்தில் தாக்கல் செய்யாததால் கடந்த 23.4.2014 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பெயர் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேராண்மை மாத இதழின் ஆசிரியர் விமலேஷ்வரன் உள்ளிட்ட இளம் பத்திரிகையாளர்கள் சிலர் சென்னை பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களின் நலன் கருதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பெயரை புதிதாக பதிவு ( 425/2021 ) செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக முறையான கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்காத நிர்வாகிகள் இல்லாமல் ஏற்கனவே உள்ள உறுப்பினர்களுடன் இணைந்து புதிய நிர்வாகத்தின் கீழ் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சிறப்பாக செயல்பட்டு அதன் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என விமலேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.