கலைஞர்களை கௌரவித்த குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் நிறுவனம்
கலைத் துறையில் சாதனங்கள் புரிந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டி கௌரவிக்கும் வகையில் நடிகர் விக்னேஷ், மைம் கோபி,நடிகை சாதனா ஆகியோருக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டமும், சாதனையாளர் விருதும் Global Achievers Council நிறுவனத்தின் சார்பில் விருது வழங்கும் விழாவினை காலை தமிழகம் பத்திரிகை ஆசிரியர் செல்வம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
சாதனையாளர்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி கணேசன் விருதுகளை வழங்கி பாராட்டினார். அவருடன் அருள் மணி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.
மேலும் கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய ஆவடி மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாஃபர் அவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஆவடி மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றும் அப்துல் ஜாஃபர் அவர்கள் கொரோனா காலங்களில் பல்வேறு விழிப்புணர்வு பாடல்களைப் பாடியுள்ளார். அனைவரும் வீடுகளில் முடங்கி இருந்த போது தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் ஆவடி மாநகராட்சி முழுவதும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.
இவரது சேவையை பாராட்டி கௌரவிக்கும் வகையில் விருது வழங்கி பாராட்டியுள்ளனர் Global Achievers Council நிறுவனம். இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் நடிகர் விக்னேஷ், மைண் கோபி, அருள் மணி மற்றும் நெற்றிக்கண் தலைமை நிருபர் சிராஜூதீன்,கோவை மாவட்ட நிருபர் மாரீஸ் வரன், அப்துல் மாலிக் (காவலர் செய்தி) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.