ஷாருக்கானின் டங்கி டிராப்-3 படத்தில் ராஜூ ஹிரானியின் உறுதியை பாராட்டிய பாடலாசிரியர் !
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் டங்கியில் இருந்து டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் உண்மையிலேயே மனதைக் கவரும் விருந்தாக வந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட இந்த பாடல், இதயம் வருடும் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதையை வெளிநாட்டுக்குச் செல்லும் தங்கள் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, விவரிக்கிறது, தாய்நாட்டைப் பிரிந்து வாடும் ஏக்கத்தை, எதிர்காலத்தைத் தேடுவதில், தங்கள் வேர்களிலிருந்து பிரிந்தவர்களின் மனதின் வலியைப் பிரதிபலிக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷாருக்கான் மற்றும் சோனு நிகம் கூட்டணியில் வந்துள்ள இந்தப் பாடல், ஜாவேத் அக்தரின் மந்திர வரிகளில் ப்ரீதம் இசையில் இதயம் வருடுகிறது.
பல ஹிட் பாடல்களில் SRK உடன் இணைந்து பணியாற்றிய ஜாவேத் அக்தர், டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே பாடலில் மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். டங்கி படத்திற்காக SRK உடன் மீண்டும் இணைவது பற்றிக் கேட்டபோது, ஜாவேத் அக்தர் பாடலைப் பற்றி சுவாரஸ்யமான விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்.., “இந்த படத்தில், எனக்கு ஒரே ஒரு பாடல் மட்டுமே உள்ளது, இந்த பாடலை படத்தில் வைக்கலாமா வேண்டாமா என்ற நிலையில் படத்தில் வைக்க வேண்டும் என்பதில் ராஜு ஹிரானி உறுதியாக இருந்தார். மேலும் அவர் குறிப்பாக என்னை எழுதும்படி கேட்டுக் கொண்டார்.பாடலை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். பொதுவாக, நான் பாடல் வரிகளை இசையமைத்த பிறகே எழுதுவேன், ஆனால் ப்ரீதம் பாடலை முதலில் எழுதுமாறு பரிந்துரைத்தார். பின்னர் அதற்கேற்ப மிக அற்புதமான இசையை உருவாக்கினார். இந்தப்பாடல் உங்களைக் கண்டிப்பாக மகிழ்விக்கும் தனித்துவமானதாக இருக்கும்.
ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘டங்கி’ திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பரில் வெளியாகிறது.