“சூரியனும் சூரியகாந்தியும்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், இயக்குநர் பேரரசு, அப்புக்குட்டி, சந்தான பாரதி, ராசி அழகப்பன், சச்சின் மாலி, ஆர்.சுந்தர்ராஜன், எழில், மங்களநாத குருக்கள், சௌந்தர பாண்டியன், விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, விழாவை சிறப்பித்தனர். “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சந்தான பாரதி, செந்தில் நாதன், ராஜசிம்மன், ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு திருவாரூர் ராஜா, இசை ஆர்.எஸ்.ரவி பிரியன், எடிட்டிங் வீரசெந்தில்ராஜ், டான்ஸ் மாஸ்டர் மஸ்தான், பாடல்கள் ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன், சண்டைப் பயிற்சி ஸ்பீடு மோகன், கலை ஜெயசீலன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு டெய்லி குருஜி, தயாரிப்பு ஏ.எல்.ராஜா. “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுதல் பாவம்” என்ற பாரதியாரின் பாடல் தான் கதையின் மையக் கருத்து. சூரியன் மேல் காதல் கொண்ட சூரியகாந்தி பூப்போல, கதாநாயகி, நாயகனை காதலிப்பதும், காதலுக்குள் சாதி பேய் நுழைந்து, என்ன செய்கிறது என்பதை தான் ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தின் கதை சொல்கிறது.

விரைவில் திரையில் உதயமாகுகிறது “சூரியனும் சூரியகாந்தியும்”.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button