சிம்ரன்-சசிக்குமார் இணைந்து நடிக்கும் புதிய படம்
சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. சசிகுமாரின் பிறந்த நாளையொட்டி இப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சசிகுமார் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘நந்தன்’. இந்தப் படத்தை தொடர்ந்து அவர் அடுத்து நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவிந் இயக்குகிறார். இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ் பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.