“பவர் லட்டு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !
லட்டுவை வைத்து சமீப காலமாக பல பிரச்சனைகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. 2013 ல் கண்ணா லட்டு திங்க ஆசையா என கேட்ட பவர் ஸ்டார் தற்போது ஒரு புது விதமான லட்டு ஒன்றை தனது ரசிகர்களுக்காக விருந்தளிக்க உள்ளார். தற்போது பவர் ஸ்டார் அவரது இயக்கத்தில் உருவாக உள்ள புது படத்தின் பெயர் “பவர் லட்டு” என பெயர் வைத்துள்ளார்.
இந்தப் படத்தை மாபெரும் பொருட்செலவில் L V கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கின்றார், இவர் இதறக்கு முன்னதாக பவர் ஸ்டார் நடித்த “முன்தினம்” படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். அத்திரைப்படம் மிக விரைவில் வெளிவர உள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியது மனோஜ் கார்த்திக் காமராஜு, இவர் வைஜெயந்தி ஐ பி எஸ், ப்ருஸ்ட்லீ ரிடர்ன்ஸ் படங்களின் இயக்குனர் ஆவார். வினோத் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள வசந்த் மோகன்ராஜ் இசையமைக்கின்றார். அது மட்டுமின்றி இந்த படத்தை 2S எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ் வினோத் குமார் வெளியிட உள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தமிழ் திரைப்பட நகைச்சுவை ஜாம்பவான்களில் ஒருவரான நகைச்சுவை தென்றல் செந்தில் வெளியிட, பவர் ஸ்டாரும் தயாரிப்பாளரும் பெற்று கொண்டனர்.