உலகமெங்கும் ரசிகர்களின் பாராட்டு மழையில் “ஓ மை டாக்” உற்சாகத்தில் நடிகர் அருண் விஜய்
அமேசான் பிரைம் வீடியோவில் சமீபத்தில் வெளியான “ஓ மை டாக்” திரைப்படம் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் பொழுது போக்கு சித்திரமாக அமைந்துள்ளது. ஒரு சிறுவனுக்கும் நாய்க்குட்டிக்கும் இடையிலான உண்மையான உறவை வெளிப்படுத்தும் இந்தப் படம் சினிமா ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
தமிழ்த்திரையுலகில் முதன் முறையாக தந்தை, மகன், பேரன் மூன்று தலைமுறை நடிகர்கள் விஜயகுமார், அருண் விஜய், அவரது மகன் ஆர்ணவ் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத வாய்ப்பு நடிகர் விஜயகுமாருக்கு கிடைத்திருக்கிறது. ஒரு நடுத்தர குடும்பத்தில் தந்தை, மகன், பேரன் இடையேயான உறவையும் எதார்த்தமான வாழ்க்கை முறையையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். மூன்று பேரும் அவரவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.