விவேக்கின் வீடு அமைந்திருக்கும் சாலைக்கு விவேக்கின் பெயர். திரையுலகினர் வரவேற்றுள்ளனர்.
நடிகர் விவேக் இல்லம் அமைந்திருக்கும் பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று, சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டு அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்… திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணர், கலைமாமணி, பத்மஸ்ரீ விவேக் கடந்த 17.04.2021 அன்று இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.
அன்னாரின் நினைவாக அவர்தம் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-10, பகுதி-29, வார்டு-128-ல் அமைத்துள்ள பத்மாமதி நகர் பிராதன சாலையினை அப்பகுதி வாழ் மக்கள். சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் “சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயர்மாற்றம் செய்திட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், மறைந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் சின்னக் கலைவாணர். கலைமாமணி, பத்மஸ்ரீ திரு. விவேக் அவர்களின் நினைவாக, அவர்தம் புகழினை பறை சாற்றும் வகையில் அவர் மறைத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அன்னாரின் நினைவாக அவர்தம் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலையினை மாமன்றத்தின் பின்னேற்பு அனுமதிக்குட்பட்டு, “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” என பெயர் மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியின் மாண்புமிகு மேயர் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
விவேக்கின் வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதை திரையுலகினரும், சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.