“வாய்தா” திரை விமர்சனம் 4/5
சமீப காலமாக தமிழ் திரையுலகில் சமூக மாற்றத்திற்கான படங்கள் வெளிவருகிறது. தமிழக மக்களும் சமூக உணர்வுள்ள நல்ல படங்களை கொண்டாடி வெற்றி பெறவும் வைக்கின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் வெளியான “வாய்தா” திரைப்படம் மக்களின் பேராதரவுடன் பாராட்டுக்களைப் குவித்துள்ளது.
மறுக்கப்பட்ட நீதியை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களில் நீதிமன்றங்களுக்கு வெளியே நடைபெறும் நடவடிக்கைகளை மட்டும் பார்த்தவர்களுக்கு, நீதிமன்றங்களுக்கு உள்ளே நடக்கும் நிகழ்வுகளையும், அதிகார வர்க்கத்தின் சாதிய அட்டூழியங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
இன்றும் பல கிராமங்களில் உயர் ஜாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களை தீண்ட தகாதவர்களாகத்தான் பார்க்கிறார்கள். விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக நாகரீகமான வாழ்க்கையைத் தேடி நகர்புறங்களைத் தேடிச் சென்றாலும், விசேஷங்களுக்கு சொந்த ஊருக்கு வரும்போது உயர் ஜாதியினர் தெருக்களை கடக்கும் போது அடிபணிந்து தான் செல்ல வேண்டியிருக்கிறது.
வாய்தா படத்தை பார்க்கும் ஒவ்வொரு வரையும் தங்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்று, இளமைக்கால நினைவுகளையும், காதலையும் நினைவுகூரும் வகையில் அழகான காதலையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மறுக்கப்படும் உரிமைகளையும் பெறுவதற்காக ஆதிக்க சாதியினரை எதிர்த்து நீதிக்காக போராடும் சலவைத் தொழிலாளியின் போராட்டத்தை மையமாக வைத்து கதைகளத்தை அமைத்துள்ளார் அறிமுக இயக்குனர் மகிவர்மன்.
இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் கதாப்பாத்திமாகவே வாழ்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.