நடிகர் தனுஷ் வெளியிட்ட “எண்ணம் போல் வாழ்க்கை” பாடலின் டீசர்…
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விரைவில் வெளியிட இருக்கும் “எண்ணம் போல் வாழ்க்கை” பாடலின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். இந்த பாடலில் பிரபலமான இருபது திரை நட்சத்திரங்கள் முதல் முறையாக தங்களது பங்கேற்றுள்ளனர்.
எட்வின் இசையில், படத் தொகுப்பாளர் சாபு ஜோசப் எடிட்டிங் செய்து, டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடனம் அமைக்க, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் கவிதா பாடலை எழுதி இயக்கியுள்ளார்.
விரைவில் “எண்ணம் போல் வாழ்க்கை” பாடலை யுவன் ஷங்கர் ராஜா தனது U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் இணையதளத்தில் வெளியிட இருக்கிறார். இந்நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட “எண்ணம் போல் வாழ்க்கை” பாடலின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.