இயக்குனர் சங்கத் தேர்தல் : மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு…
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. பொது இடங்களில் கூட்டம் கூடக்கூடாது என்ற விதிமுறையை கடைப்பிடிக்காமல் தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வருகிற 25 ஆம் தேதி ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் நடத்த ஆயத்தமாகி வருகிறது.
ஏற்கனவே கொரோனா பரவல் அதிகமாக பரவி வருவதால் சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு நடைபெற இருந்த தேர்தலை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.
அதேபோல் தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தலையும் சென்னை மாநகராட்சி ஆணையர் உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனோ விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக மாநகராட்சி ஆணையர் இயக்குனர் சங்கத் தேர்தலை உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுநலன் கருதி நீதிமன்றம் சென்று தேர்தலை ரத்து செய்ய ஆணை வாங்குவதற்கு முன் மாநகராட்சி ஆணையரே இயக்குனர் சங்கத் தேர்தலை இரத்து செய்வார் என்ற எதிர்பார்ப்பில் பெரும்பாலான உறுப்பினர்கள் காத்திருக்கிறார்கள்.