மீண்டும் ஜோடி சேரும் ஜஸ்வர்யா, பாக்கியராஜ் ஜோடி
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரிப்பில் புதிதாக உருவாகும் படம் “புரொடக்சன் NO 4”. கணேஷ் பாபு இயக்கும் இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் என நட்சத்திரப் பட்டாளமே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானதால் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக கே.பாக்கியராஜ், ஜஸ்வர்யா ஜோடி கதாநாயகனின் தாய்,தந்தையராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இவர்கள் இருவரும் 1992 ல் வெளிவந்த “ராசுக்குட்டி” படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாக்கியராஜ், ஜஸ்வர்யா ஜோடி இந்தப் படத்தில் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.