“பிரேக்கிங் நியூஸ்” ஐ விரும்பும் நடிகர் ஜெய்
நடிகர் ஜெய் நடிப்பில், ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் “பிரேக்கிங் நியூஸ்” என்ற பெயரில் சமீபத்தில் பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜெய் ஆக்ஷன் காட்சிகளில் உற்சாகமாக கலந்து கொண்டு, டூப் பயன்படுத்தாமல் தானே நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் சரக்கு விமானத்தில் சில காட்சிகள் நடைபெறுவதாக திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஒரு கோடி ரூபாய் செலவில் கார்கோ விமான செட் அமைத்து பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். நடிகர் ஜெய் படப்பிடிப்பு தளத்தில் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுத்ததால், சவாலான காட்சிகளையும் எளிதாக எடுக்க முடிந்தது என்கிறார் படத்தின் இயக்குனர்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பானு ரெட்டி நடித்துள்ளார். மேலும் சினேகன், தேவ் கில், ஜெயபிரகாஷ், சந்தானபாரதி, பழ. கருப்பையா, தேனப்பன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.