KGF-2 தயாரிப்பாளரின் புதிய அறிவிப்பால்,ரசிகர்கள் உற்சாகம்..!
திரையுலகில் கடந்த வாரம் வெளியான கேஜிஎப் -2 நாடு முழுவதும் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து, பிரமாண்ட நிறுவனம் என அனைவராலும் பேசப்படும் ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா கதாநாயக நடித்த சூரரைப்போற்று படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து, தற்போது ஹிந்தியில் சூரரைப்போற்று படத்தை இயக்கி வரும் சுதா கொங்கரா இந்தப் படத்தை இயக்க இருப்பதாக ஹோம்பாலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இதற்கிடையில் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.